டோக்கியோ சுரங்கப்பாதையில் சந்தேகத்திற்கிடமான பொருள் எச்சரிக்கை

டோக்கியோ சுரங்கப்பாதையில் சந்தேகத்திற்கிடமான பொருள் எச்சரிக்கை
டோக்கியோ சுரங்கப்பாதையில் சந்தேகத்திற்கிடமான பொருள் எச்சரிக்கை

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான பொருள் கண்டுபிடிக்கப்பட்டது அதிகாரிகளை பதற வைத்துள்ளது. சுமார் 1 மணிநேரம் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில், போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் சுமார் 42 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள யுனோ ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான பொருள் பீதி ஏற்பட்டது. ஹிபியா மெட்ரோ ரயில் பாதையில் காலை 07 மணியளவில் ரயில் நடைமேடையில் காணப்பட்ட வெள்ளைப் பொடியானது அதிகாரிகளை பீதிக்குள்ளாக்கியது. சம்பவ இடத்திற்கு ஏராளமான போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அனுப்பப்பட்ட நிலையில், பயணிகள் நடைமேடைக்கு வெளியே வெளியேற்றப்பட்டனர். Naka-Okachimachi மற்றும் Kita-Senju ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் சுமார் ஒரு மணி நேரம் இடைநிறுத்தப்பட்ட நிலையில், போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் சுமார் 30 ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடரூந்து சேவைகள் தற்காலிகமாக மேற்கொள்ள முடியாத காரணத்தினால் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்ட போதிலும், பாதுகாப்பு விசாரணைகளில் எவ்வித ஆபத்தும் காணப்படவில்லை. சம்பவம் குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்

பதில் விடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது.


*