கென்யாவில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு வீடுகள் மீது மோதி விபத்துக்குள்ளானது

கென்யாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு வீடுகளில் மோதி விபத்து: கென்யாவில் சரக்கு ரயில் ஒன்று தண்டவாளத்தை விட்டு விலகி வீடுகளில் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை.
கென்யாவின் தலைநகர் நைரோபியில் சரக்கு ரயில் ஒன்று சேரி வழியாக சென்றபோது தடம் புரண்டது. உகாண்டாவுக்கு கோதுமை ஏற்றிச் சென்ற 22 வேகன்களைக் கொண்ட ரயில், வீடுகள் மீது மோதியது.
விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இடிபாடுகளுக்கு அடியில் இருந்தவர்களை மீட்பு குழுவினர் பல மணி நேரம் தேடினர். விபத்து நடந்த இடத்தில் திரண்டிருந்தவர்கள் மீட்புப் பணிகள் மெதுவாக நடப்பதாக புகார் தெரிவித்தனர்.
விபத்து நடந்த இடம் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய சேரிகளில் ஒன்றாகும். விபத்தின் போது தண்டவாளங்கள் வழுக்கும் நிலையில் இருந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.ரயிலுக்கு அருகில் வீடுகளை கட்ட வேண்டாம் என எச்சரித்தும் பலன் இல்லை என கென்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்

பதில் விடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது.


*