ஜெர்மனியில் மாணவர்களை ஏற்றிச் சென்ற டபுள் டெக்கர் பேருந்து ரயில் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது

ஜெர்மனியில் மாணவர்களை ஏற்றிச் சென்ற டபுள் டெக்கர் பேருந்து ரயில் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது
ஜெர்மனியின் முனிச் நகரில், டென்மார்க் மாணவர்களை ஏற்றிச் சென்ற இரட்டை அடுக்கு பேருந்து ரயில் பாலத்தில் மோதியதில் 40 பேர் காயமடைந்தனர், ஒருவர் பலத்த காயமடைந்தார்.

விபத்தில் காயமடைந்த 16 முதல் 19 வயதுக்குட்பட்ட 40 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முனிச் பொலிஸ் பிரிவின் Alexandra Schmeitz தெரிவித்துள்ளார்.

ஆபத்தான நிலையில் இருந்த 17 வயதுடைய மாணவிக்கு தலை மற்றும் முதுகுத்தண்டு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் பாலத்தின் உயரம் 3,4 மீட்டர் என்று குறிப்பிடப்பட்டிருந்த பலகையை பேருந்தின் ஓட்டுநர் கண்டுகொள்ளாமல் விட்டதாக நம்பப்படுவதாக முனிச் தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்

பதில் விடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது.


*